'ஆதிபுருஷ்' படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் - அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகர்..!!

 
1

அயோத்தி ராமர் கோவில் பூஜாரி சத்யேந்திர தாஸ், 'ஆதிபுருஷ்' படத்தை திரையிடுவதை நிறுத்த வேண்டும். ஸ்ரீராமன், அனுமன், ராவணன் போன்றவர்களை உண்மைக்கு புறம்பாக படத்தில் காட்சி படுத்தியுள்ளார்கள் என்றார். திரைப்படம் எடுப்பது குற்றமில்லை, ஆனால் திட்டமிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவதற்காக படம் எடுப்பது சரியல்ல - என சத்யேந்திரதாஸ் கூறியதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த தினம் வெளியான டீசருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விமர்சனங்களால் மனம் உடைகிறது என்று இயக்குனர் ஓம் ராவத் கூறியுள்ளார். இது தியேட்டருக்காக எடுக்கப்பட்ட படம். மொபைல் போனில் பார்ப்பது சரியானதல்ல. 3டியில் பார்த்தாலே புரியும் என்கிறார் இயக்குனர்.

1

பிரபாஸின் கேரியரில் ஆதிபுருஷ் மிகப்பெரிய ப்ராஜெக்ட். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. படத்தின் மோசமான கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் விமர்சிக்கப்பட்டது.

படத்தில் கதாநாயகியாக க்ரித்தி சனோன் நடிக்கிறார். சயிப் அலிகான், சன்னி சிங், தேவ் தத்தா நாகே, சோனல் சவுகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் ஜனவரி 12, 2023 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, தெலுங்கு தவிர தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்படவுள்ளது. ஐமேக்ஸ் 3டி வடிவத்திலும் இப்படம் வெளியாகிறது.

From Around the web