#BIG NEWS:- திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பிரபல நடிகை பகிரங்க குற்றச்சாட்டு..!! 

 
1

பாலிவுட்டில் 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரேட் கிராண்ட் மஸ்தி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்ச்சனா கெளதம். அதனைத் தொடர்ந்து, ஹசீனா பார்க்கர், பாராத் நிறுவனம், சந்திப்பு வாரணாசி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் மிஸ் பிகினி 2018, மிஸ் உத்தர பிரதேசம் 2014 மற்றும் மிஸ் காஸ்மோ வேர்ல்ட் 2018 ஆகிய பட்டங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக உத்தர பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையிமான அர்ச்சனா கெளதம் கடந்த வாரம் வியாழக்கிழமை (செப்., 1) திருப்பதி வந்துள்ளார்.

Archana-Gautam

அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி அதன் பிறகு விஐபி டிக்கெட் ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அந்த அலுவலகத்தில் இருந்தபடி செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார்.


இந்த விடியோயை நடிகை அர்ச்சனா கெளதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டதாகவும், மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விஐபி தரிசனம் என்ற பெயரில் ரூ. 10,500 கேட்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web