#BREAKING:- அவன் இவன் பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!! 

 
1

ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஜி எம் குமார். இயக்குனர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு பாலா சூப்பர் ஹிட் கொடுத்த படம் அவன் இவன். இந்த படத்தில் விஷால், ஆர்யா, ஜனனி ஐயர், மதுஷாலினி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாபாத்திரத்தில் ஜிஎம் குமார் நடித்திருந்தார். இந்த படமே இவரை மையமாக வைத்து தான் கதை நகர்கிறது.

மேலும், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இருந்தாலும் இவர் இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய முழு பல கோவிந்தராஜ் மனோகரன் குமார்.இவர் சினிமா உலகில் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர். 1986 ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஆண்டு அறுவடை நாள் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

பின் இவர் 1993 ஆம் ஆண்டு கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் நடிகராக ஆனார். அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்திருக்கிறார். பல இவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.இவர் சிலகாலம் சினிமா பக்கமே வராமல் இருந்தார். பின் வெயில் படம் இவருடைய சினிமாவிற்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது. அதற்கு பின் தொடர்ந்து இவர் பல அதற்கு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மலைக்கோட்டை, மச்சக்காரன், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தாரதப்பட்டை, சரவணன் இருக்க பயமேன் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளார்.

1

இந்நிலையில், ஜி.எம்.குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

From Around the web