#BREAKING: பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்... திரையுலகினர் அஞ்சலி..!!

1936-ம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள ஹம்பி பகுதியில் பிறந்த ஜமுனா, ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் வளர்ந்தார். 1953-ல் வெளியான 'புட்டிலு' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 1955-ல் எல். வி. பிரசாதின் 'மிஸ்ஸம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்த பிறகு இவர் புகழ்பெற்றார். தொடர்ந்து, தங்கமலை ரகசியம், நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஜமுனா, அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமிந்திரி மக்களவைத் தொகுதியில் 1989ல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்குப் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.