பிரபல தமிழ் நடிகருக்கு 14 ஆண்டுகள் கழித்து பிறந்த ஆண் குழந்தை..!! குவியும் வாழ்த்துக்கள் 

 
1

2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகர் நரேன்.அதன்பிறகு அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பார் 

பின்னர் சில ஆண்டுகள் தமிழ் படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர் கத்துக்குட்டி படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.அதன் பிறகு முகமூடி, பள்ளிக்கூடம் என கிடைக்கும் ரோலில் நடித்து வந்தார். பின்னர் லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை, நடிகர் நரேன் 2007 ஆம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்மையா என்ற பெண் குழந்தை 2008 ஆம் ஆண்டு பிறந்தது.

இந்நிலையில், 14 வருடங்கள் கழித்து, சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.


 

 

From Around the web