பிரபல பாலிவுட் நடிகைக்கு வளைகாப்பு..!! விருந்தினர்களுக்கு நடிகை கொடுத்த இன்ப அதிர்ச்சி..!!  

 
1

பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் சோனம் கபூர்.ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் கொண்டவர். கடந்த 2013ம் ஆண்டு இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘ராஞ்சனா’ படத்தில் தனுஷ் உடன் ஜோடியாகவும் நடித்திருக்கிறார். சோனம் கபூரும், ஆனந்த் அஹூஜாவும் நீண்டகாலமாக நண்பர்களாக பழகி வந்த நிலையில் அவர்களுக்குள் அழகிய காதல் உருவானது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்.

1

 சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவர் தனது வளைகாப்பு விழாவை லண்டனில் கொண்டாடினார்.அவ்விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு ஒரு கைக்குட்டையும், பையும் பரிசாக கொடுக்கப்பட்டது. அந்த கைக்குட்டையில் மற்றும் அந்த பையில் இருந்த செயினில் விருந்தினர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதை கண்ட விருந்தினர்கள் ஆனந்தமடைந்தனர்.

From Around the web