பிரபல சீரியல் நடிகைக்கு வளைக்காப்பு..!!

 
1

‘செவ்வந்தி’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை திவ்யா,தனது கணவர் அர்னவ் மீது புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் .‘செவ்வந்தி’ சீரியல் மூலம் பிரபலமான அவர், ‘செல்லம்மா’ சீரியலில் நடித்து வரும் அர்னவ் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து கர்ப்பமான திவ்யா, அர்னவ் வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வருவதாகவும், தனது கர்ப்பத்த கலைக்க முயற்சி செய்ததாகவும் பரபரப்பு புகார் ஒன்றை கூறினார்.

இதேபோன்று அர்னவ்வும் சில புகார்களை, திவ்யா மீது கூறினார். இப்படி இருவரும் மாறிமாறி புகார்களை கொடுத்தனர். இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திவ்யாவின் புகாரின் பேரில் சீரியல் படப்பிடிப்பில் இருந்த அர்னவ், போலீசார் கைது செய்தனர். பின்னர் அர்னவ் ஜாமீனில் வெளியே வந்தார். 

இந்நிலையில் கருவுற்றிருக்கும் திவ்யாவிற்கு மன அழுத்தத்தை குறைக்க அவரது பெற்றோர், நடிகர் பூவிலங்கு மோகன், நடிகை ஸ்ரீரஞ்சனி இணைந்து வளைக்காப்பு நடத்தினர். இது குறித்து வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திவ்யா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

மன அழுத்தத்தில் இருக்கும் திவ்யாவுக்கு முன்னதாக அவரது வீட்டார், சக நடிகர், நடிகைகள் இணைந்து சீமந்தும் நடத்திய வீடியோ அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

From Around the web