தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மனைவிக்கு வளைக்காப்பு..!! குவியும் வாழ்த்துக்கள்..!!  

 
1

பிசியான தயாரிப்பாளராக இருக்கும் ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தின் நடிகராக உருவெடுத்தார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். கதாநாயகனை விட வில்லனாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘விசித்திரன்’ நல்ல வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘ஜோசப்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியது. 

இதற்கிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு மது என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார் ஆர்.கே.சுரேஷ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது.அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கிறார் மது.
 

From Around the web