முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...  பட்டையை கிளப்பும் ‘பகாசுரன்’ டீசர்..!! 

 
1

இயக்குனர் மோகன் ஜி தனது அடுத்த படமான ‘பகாசுரன்’ படத்தை வெளியிட தயாராகி வருகிறார். இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், நட்டி ஒரு போலீஸ்காரராக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் தாராக்ஷி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, சசிலையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் இந்த படத்தையும் ஒரு சமூக சிந்தனையுடன்தான் மோகன் ஜி இயக்கியுள்ளார். செல்வராகவன் துப்பாக்கியுடன் மிரட்டும் காட்சிகள் வரவேற்பை பெற்றுள்ளது. 

From Around the web