நடிகர் போண்டா மணிக்கு உதவுவதுபோல் நடித்து ரூ.1 லட்சத்தை திருடிய பலே ஆசாமி..!! 

 
1

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் போண்டா மணி. தமிழ் சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். வடிவேலு பீக்கில் இருந்தபோது அவருடைய அணியில் தவறாமல் இடம் பெற்று வந்தவர்.

1991-ம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள போண்டா மணி, சுமார் 270 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆரம்ப காலக் கட்டத்தில், கவுண்டமணி, செந்தில் படங்களில் அவர்களோடு சேர்ந்து காமெடி செய்தவர், போண்டா மணி.

Bonda-Mani

பிறகு நடிகர்கள் வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு ஆகிய காமெடி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். வடிவேலுவுடன், இவர் நடித்துள்ள பல காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில், ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் சக நடிகர்களான பெஞ்சமின் கிங்காங் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் போண்டா மணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தமிழக் அரசு மற்றும் நடிகர்கள் என பல்வேறு தர்ப்பினர் உதவி செய்தனர்.

arrest

நடிகர் போண்டா மணி சிகிச்சையில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு உதவுவது போல் ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் பழகி வந்தார். நடிகர் போண்டா மணியின் மனைவி மாதவி மருந்து வாங்கி வர கொடுத்த ஏடிஎம் கார்ட் மூலம் ராஜேஷ் பிரித்தீவ் நகை வாங்கி மோசடி செய்துள்ளார். ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web