தளபதி சம்மதித்தால் பீஸ்ட் 2.! நெல்சன் அதிரடி.!

 
1

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த  படம்  ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் இந்த படம் உலகம் முழுவதும்  100 கோடி வசூலை கடந்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்து வருகிறது.

தளபதியின் தீவீர ரசிகரான நெல்சன் சிறு வயதிலிருந்து திரையில் பார்த்து விஜயை ரசித்தவர் தற்போது அவரை வைத்து படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்களுக்கு பீஸ்ட் படத்தின் மீது பெரிய எதிர்பார்பு இருந்தது.ஆனால், பீஸ்ட் படம் விஜய் ரசிகர்கள் எதிர்பார்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் சிலர் இயக்குனர் நெல்சனை தீட்டி தீர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் நெல்சன்” விஜய் சார் சம்மதித்தால் பீஸ்ட் 2 எடுக்கலாம்” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நெல்சன் நீங்க ஒன்னு பண்ண வேணாம்.. ஒன்னே பார்க்க முடியல இதுல இரண்டா.?  என கூறி வருகிறார்கள்

From Around the web