விபத்தில் சிக்கிய பீஸ்ட் பட நடிகை..!! 

 
1

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார் பூஜா ஹெக்டே.தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்டே அறிமுகமாகி இருந்தாலும், இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது தெலுங்கு திரையுலகம் தான். நாக சைதன்யா, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் , அல்லு அர்ஜுன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர்ஹிட் தான்.இவர் கடைசியாக அல்லு அர்ஜுன் உடன் ‘ஆலவைகுண்டபுரம்லோ’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

1

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில், விஜய்க்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்தார். 

இந்நிலையில், இவருக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு அவர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஹிந்தியில் இவர் நடித்த வரும் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்கிற படத்தின் படப்பிடிப்பு போது, தவறி விழுந்ததில், பூஜாவின் இடது காலில் உள்ள தசை நார் கிழிந்து வலியில் துடித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 

தற்போது மருத்துவர்களின் அறிவுரை படி... சில நாட்கள் ஓய்வுக்கு பின்னரே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய காலில் கட்டுபோட்டுள்ள புகைப்படத்தை இஸ்டாகிராம் ஸ்டோரியில், புகைப்படம் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

1
 

From Around the web