சன் டிவியில் பீஸ்ட் படம் விஜய் டிவியில் விக்ரம்... தூள் கிளப்பும் தீபாவளி..!!   

 
1

கடந்த ஏப்ரல் 13-ம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் திரையரங்குகளில் ‘பீஸ்ட்’ படம் வெளியானது.  படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு சன் டிவி-ல் ஒளிபரப்பாக இருக்கிறது. தீபாவளி அன்று மாலை 6.30 மணிக்கு விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.இதற்கான ப்ரோமோக்கள் தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்பாக தொடங்கியிருக்கிறது.

1

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை ஒளிபரப்ப விருக்கிறது விஜய் டிவி.

சிவகார்த்திகேயன் நடிப்பில் முதன் முதலில் 100 கோடி வசூலித்த டான் படத்தை தீபாவளி ஸ்பெஷலாக ஒளிபரப்பவிருக்கிறது கலைஞர் டிவி.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 2 அல்லது ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன் ஆகியப் படங்களில் ஒன்று ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.

தீபாவளி அன்று விஜய் சூப்பரில் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

மேற்கூறிய படங்களின் ப்ரோமோக்கள் விரைவில் அந்தந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

From Around the web