விரைவில் ஓடிடி-யில் வெளியாகிறது பீஸ்ட் ..? இந்த தேதியில் வெளியாக வாய்ப்பு..!!  

 
1

நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கிய இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கடந்த 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எதிர்மறையான வெளியாகி வந்தபோதும், கடந்த 5 நாட்களில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் மே 11-ம் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.பீஸ்ட் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் நெக்ஸ்ட் தளம் 40 கோடிக்கு வாங்கி உள்ளது. இதே போல் தென்னிந்திய டிஜிட்டல் உரிமத்தை 45 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் வாங்கி உள்ளது.

அஜித் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு, 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தின் 50 வது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் தான் நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்பாகவே வலிமை படம் 5 மொழிகளில் ஜீ 5 சேனலில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஓடிடி.,யிலும் அதிக நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை வலிமை பெற்றது குறிப்பிடத்தக்கது 

From Around the web