குவியும் வாழ்த்துக்கள்..!! கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் ஷங்கர்...!!
Sat, 6 Aug 2022

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பிரபலங்களுக்கு டாக்டர் பட்டங்களை வழங்கி. கெளரவித்து வருகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 4 பேருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இயக்குனர் ஷங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட நான்கு பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ் உடனிருந்தார்.
தனக்கென தனிப்பாதையில் செயல்பட்டு வரும் ஷங்கர், தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.