குவியும் வாழ்த்துகள்..!! பெண் குழந்தைக்கு தாய்யான விஜய் பட நடிகை!! 

 
1

2021-ல் வெளியான ‘அஜ்னபீ’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை பிபாசா பாசு. இதைத் தொடர்ந்து முதல் தெலுங்கு படத்தில் நடித்தார். அவர் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி இருக்கிறார்.

bipasha-basu

‘அலோன்’ படத்தில் நடிக்குபோது பிபாசா பாசு, கரண் சிங் குரோவருக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் ‘டேஞ்சரஸ்’ என்ற வெப் தொடரில் தம்பதிகள் இருவரும் இணைந்து நடித்தனர்.

இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பிபாசா பாசு கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டகிராமில் அறிவித்தார். அதன்பிறகு அது தொடர்பான சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், நடிகை பிபாசா பாசுவிற்கு நேற்றுமுன்தினம்  பெண் குழந்தை பிறந்தது. நடிகர் கரண் சிங் குரோவர் - நடிகை பிபாஷா பாசு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தம்பதிக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web