நிஜ வாழ்க்கையிலும் காதலில் விழுந்த பாரதி கண்ணம்மா அருண்..!! 

 
1

சில வருடங்களுக்கு முன், யாராவது பாரதி என்று சொன்னால், உடனே மகாகவி பாரதி தான் நியாபகத்துக்கு வரும். ஆனால் இன்று பாரதி பெயரை சொன்னாலே, விஜய் டிவியில் நடிக்கும் பாரதி தான் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு பாரதி@அருண் பிரசாத் தன் நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆணி அடித்தாற்போல பதிந்து விட்டார்.

விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல், தமிழக மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் தொடராக உள்ளது. அவ்வளவு ஏன்? ஒரூ குழந்தையை அழைத்துக் கேட்டால் கூட பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்று சொல்லும். அந்தளவுக்கு இந்த சீரியல் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.

சேலத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாரதி@அருண் பிரசாத், சேலத்தில் உள்ள ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாலயா பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். அருண் பள்ளியில் படிக்கும்போதே பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போதே ஆடியன்ஸை தன் பக்கம் இழுக்கும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். பிறகு சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில், விஷூவல் கம்யூனிகேஷன் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்படங்களில் நடித்தார்.

வெங்கடேஷ் இயக்கிய “நிகழ் காலம்” என்ற தமிழ் குறும்படத்தில் அருண் அறிமுகமானார். தொடர்ந்து, ”ஏனோ  வானிலை  மாறுதே,” “மதிமயங்கினேன்,” “கள்ளன்,” “ஏதோ  மாயம்  செய்தாய்,”  “யானும்  தீயவன்,” “பகல்  கனவு”  உட்பட  ஏராளமான  குறும்படங்களில்  நடித்திருக்கிறார். அதில் ஏனோ வானிலை  மாறுதே  குறும்படம் அருணுக்கு சிறந்த  நடிகருக்கான  அங்கீகாரத்தை  கொடுத்தது.

தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு, மேயாத மான் படத்தில் நடிகர் வைபவின் நண்பராக நடித்து அருண் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பிறகு ஜடா படத்தில் ஹீரோ கதிரின் நண்பராக வந்தார். ஆனால் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைப்பது அவருக்கு ஒரு போராட்டமாகவே இருந்தது.அப்போது தான் அருண்-க்கு பாரதிகண்ணம்மா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது. அதுவரை வெள்ளித்திரையில் பல போராட்டங்களை சந்தித்த அருண்’ பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழ் சிரீயல் உலகில் அறிமுகமானார்.  

1

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழா சமீபத்தில் தான் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதில் விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள். ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது. அப்போது அவரை தொகுப்பாளர்கள் டாக்டர், பாரதி, டிஎன்ஏ போன்ற விஷயங்களை கூறி கிண்டல் செய்து இருந்தார்கள். இப்படி இவர்கள் கூறியதன் மூலம் அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிக்கிறார்களா? என்ற சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அருண்பிரசாத் மற்றும் அர்ச்சனா ஒன்றாக இருந்த வீடியோக்களை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்த வண்ணம் உள்ளன. இதற்கு இருவரின் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

From Around the web