நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுக்கும் பாவனா!

 
1

நடிகை பாவனா தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி  வலம் வந்தார்.  2017 ஆம் ஆண்டு ஆடம் ஜோன் என்ற படத்தில் தான் பாவனா கடைசியாக நடித்திருந்தார்.

சில பிரச்சினைகளுக்கு ஆளான அவர் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். 

தற்போது ஷராபுதீன் நடிக்கும் எண்டிக்கக்கொரு பிரேமொண்டர்ன் படத்தில் அவர் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Bhavana

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஆதில் மைமூநாத் அஷரஃப் இயக்குகிறார். அவரே படத்திற்கு திரைக்கதை மற்றும் எடிட்டிங்கும் செய்துள்ளார்.இப்படத்தில் அனார்கலி நாசர், அசோகன், ஷெபின் பென்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். போன்ஹோமி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் லண்டன் டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் முறையே ரெனிஷ் அப்துல்காதர் மற்றும் ராஜேஷ் கிருஷ்ணா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

From Around the web