சொன்னதை செய்து காட்டிய  பிக்பாஸ் அசீம்.. குவியும் வாழ்த்துக்கள் !

 
1

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. 21 போட்டியாளர்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், ஷிவின் இறுதிப்போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அசீம் மற்றும் விக்ரமன் இடையே கடுமையான போட்டி நிலவியது. 

இதையடுத்து பிக்பாஸ் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிக்பாஸ் வின்னர் பட்டமும், 50 லட்சம் ரொக்கத் தொகையும் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பிக்பாஸ் வின்னராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எனக்கு கிடைக்கும் தொகையில் பாதியை கொரானாவால் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையாக கொடுப்பேன் என்று அசீம் கூறியிருந்தார். 

இந்நிலையில் அசீம் சொன்னபடியே தனது பரிசுத்தொகை 50 லட்சத்தில் பாதியான 25 லட்சத்தை கொரானா தொற்றால் பெற்றோர்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையான தருவதாக அறிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் சொன்னதை செய்த அசீமுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


 

From Around the web