பிக்பாஸ் ஜூலி இஸ் பேக்..!!   

 
1

வீர தமிழச்சி என தன்னை அடையாளம் காட்டி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவரின் சுயரூபம் ரசிகர்களுக்கு தெரிய தொடங்கியது. பிக்பாஸ் ஜூலி செய்த காரியங்களால் ரசிகர்கள் எச்சலடைந்தனர். பின்னர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜூலி.

பின்னர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜூலி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில படங்களிலும் நடித்து வந்தார்.தற்போது ஜூலி அவ்வவ்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றார். என்னதான் ஜூலி மீது பல எதிர்மறையான நிகழ்ந்தாலும் அவருக்கென்று சில ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது ஜூலி ஒரு தொலைக்காட்சி தொடரில் கமிட்டாகியுள்ளார்.

photo

ஜீ தமிழில் மதியம் 2 மணிக்கு  ஒளிபரப்பாகும் “கன்னத்தில் முத்தமிட்டாள்” தொடரில் தான் ஜூலி ‘கொற்றவை’ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சீரியலில் அவரது எண்ட்ரி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

photo

ஜூலி மாசாக எண்ரிகொடுக்கும் புரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் ஜூலியின் நடிப்பை காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

From Around the web