பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களின் விவரங்கள்..!!

 
1

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே நிரம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது பிக் பாஸ் சீசன் 6 கோலாகலமாக தொடங்கியது. 

பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். 'விக்ரம்' படத்தின் தீம் மியூசிக்குடன் 'நாயகன் மீண்டும் வரான்' பாடல் ஒலிக்க மேடைக்கு வந்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனிடம் பேசிய பிக் பாஸ், கமலுக்கு மீசை நன்றாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது, 'தாடியுடன் வர வேண்டும் என ஆசை, ஆனால் ஷங்கர் அதனை எடுத்துக்கொண்டார்' என இந்தியன் - 2 படப்பிடிப்பு குறித்து பேசினார்.பின்னர் போட்டியாளர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார் கமல். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு 20 போட்டியாளர்கள் இந்த சீசனில் உள்ளனர். பார்வையாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரும் இதில் அடக்கம்.

ஜி.பி.முத்து :- முதல்போட்டியாளராக பலரது யூகங்களிலும் இடம்பிடித்திருந்த யூடியூபர் ஜி.பி.முத்து வந்தார் . தன் கிராமத்தில் பெரும் வரவேற்புக்கு பின்னர், தன்னை பற்றி அவர் அறிமுகம் செய்துகொண்டார். தன் மனைவி, 4 பிள்ளைகள் குறித்துப் பேசிய அவர், ஊரடங்கில் தன் குடும்பம் கஷ்டப்பட்டது குறித்து பகிர்ந்துகொண்டார். எப்படி யூடியூபில் கால்பதிக்க ஆரம்பித்தார், அதன்மூலம் சம்பாதிப்பது குறித்து பேசினார்.

1

வசந்த், சுயாதீன ராப் பாடகர் :- காசிமேட்டை ந்சேர்ந்த வசந்த், தான் சுயாதீன ராப் பாடகராக உருவானது குறித்து பகிர்ந்துகொண்டார். அவருடைய பாடலில் வரும் 'ஜொர்த்தாலே' என்ற வார்த்தைக்கு, சென்னை மொழியில் என்ன அர்த்தம் என்பதை கமல்ஹாசன் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார்.

2

ஷிவின் கணேசன், மாடல் :- பார்வையாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை, தன் பாலின அடையாளத்தைக் கடந்து ஒரு மாடலாக சாதிப்பது குறிப்பது பகிர்ந்துகொண்டார். சமூகம் தன்னை எப்படி மதிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படியாக நாம் மாற வேண்டும் என அவர் கூறினார். ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஷிவின் கணேசனுக்கு ஒரு கடமை இருப்பதாக கமல்ஹாசன் கூறினார்.

3

சின்னத்திரை நடிகர் அசீம்  :- நான்காவது போட்டியாளராக சின்னத்திரை நடிகர் அசீம் பங்கேற்றார். முஸ்லிம் சமூகத்திலிருந்து சின்னத்திரையில் சாதித்த பயணம் குறித்தும் விவாகரத்தில் முடிந்த திருமணம், மகன் மீதான பாசம் உள்ளிட்டவற்றை பகிர்ந்துகொண்டார்.

4

நடன இயக்குனர் ராபர்ட்:- சினிமா நடன இயக்குநர் ராபர்ட் ஐந்தாவது போட்டியாளராக கலந்துகொண்டார். 'அழகன்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, பல்வேறு கதாநாயகர்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்தது வரையிலான சினிமா பயணத்தை பகிர்ந்துகொண்டார் ராபர்ட்.

5

சின்னத்திரை நடிகை ஆயிஷா:- கேரளாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை ஆயிஷா ஆறாவது போட்டியாளராக கலந்துகொண்டார். அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்காக பிக் பாஸில் கலந்துகொள்வதாக தெரிவித்தார்.

6

ஷெரினா, மாடல் :- கேரளாவை சேர்ந்த ஷெரினா, எந்த பின்னணியும் இன்றி ஃபேஷன் உலகில் கால்பதித்து மாடலாக வலம்வரும் இவர், சென்னையில் புகைப்பட ஸ்டுடியோ நடத்திவருகிறார். சினிமாவில் நுழைவதற்கான கனவுடன் உள்ளார் ஷெரினா.

77

மணிகண்டன், சின்னத்திரை நடிகர் : சின்னத்திரை நடிகரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரருமான மணிகண்டன், தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள பிக் பாஸ் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

1

ரச்சிதா:- பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்த சின்னத்திரை பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி 9வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார். என்னை நான் புரிந்துகொள்வதற்கான தளமாக பிக் பாஸை பார்ப்பதாக ரச்சிதா தெரிவித்தார்.

8

ராம் ராமசாமி, மாடல்:- 10வது போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் மாடல் ராம் ராமசாமி. தான் நடித்த ஒரு திரைப்படம் வெளியாகவில்லை என தெரிவித்த அவர், ஒரேயொரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும், அதை பெற்றோருக்கு காண்பிக்க வேண்டும் என்பதைக் கனவாக கொண்டிருக்கிறார்.

9

ஆர்யன் தினேஷ் கனகரத்னம்:- 17 ஆண்டுகளாக இசைத்துறையில் உள்ள இவர், 'ஆத்திச்சூடி' உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடியுள்ளார். இலங்கையில் பிறந்த இவர், 80களில் நடந்த வன்முறைகளுக்குப் பிறகு திருச்சிக்கு வந்ததாக கூறியுள்ளார். பல்வேறு ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். தன்னை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த பிக் பாஸ் வந்துள்ளதாக கூறினார்.

1

ஜனனி:- இலங்கையைச் சேர்ந்த இவர், அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்துவருகிறார். 21 வயதேயான இவர், தன் சிறு வயதிலிருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.

1

ஷாந்தி, நடனக்கலைஞர்:- வறுமையின் காரணமாக வீட்டுக்கு பக்கபலமாக இருக்க நடனத்துறையில் நுழைந்தவர் ஷாந்தி. நடனத்துறையில் தனக்கு பக்கபலமாக இருக்கும் என்பதால் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதாக தெரிவிக்கிறார் ஷாந்தி.

1

விக்ரமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி:- ஊடகவியலாளராக இருந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக உள்ளார். தன்னை யாரென்று வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதாக கூறினார் விக்ரமன்.

1

அமுதவாணன்:- விஜய் தொலைக்காட்சியில் பிரபல நகைச்சுவை கலைஞரான அமுதவாணன், தனக்கான பெரும் அங்கீகாரத்தைப் பெற பிக் பாஸ் மேடை இருக்கும் என தான் நம்புவதாக அமுதவாணன் தெரிவித்தார்.

1

மகேஸ்வரி, தொலைக்காட்சி தொகுப்பாளர் :- தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்திருந்த மகேஸ்வரி 16வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார். குடும்பத்தை விட்டு பிரிந்துபோன அப்பா மற்றும் கணவரை கடந்து, தன் மகனுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க தைரியமாக பிக் பாஸில் விளையாடுவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

1

கதிரவன்:- 17வது போட்டியாளராக உள்ளே நுழைந்த தொகுப்பாளர் கதிரவன், சினிமா துறையில் தான் கால் பதிக்க உள்ளதாக தெரிவித்தார்.

1

குயின்ஸீ ஸ்டான்லி:- சில திரைப்படங்களில் நடித்துள்ள குயின்ஸீ, ஒரு எளிமையான நபரும் பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து வெல்லலாம் என்பதை நிரூபிக்க பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதாக குயின்ஸீ தெரிவித்தார்.

1

நிவிஷினி:- அடுத்ததாக உள்ளே நுழைந்தவர் பார்வையாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரான நிவிஷினி. சிங்கப்பூர் மாடலான இவர், தற்போது வெப் சீரீஸ் ஒன்றுக்கு உதவி இயக்குனராக உள்ளார்.

1

தனலட்சுமி, டிக் டாக்கர்:- கடைசி போட்டியாளராக 20வது நபராக உள்ளே நுழைந்தவர் தனலட்சுமி. நடிப்பு, நடனத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு டிக்டாக்கர். பார்வையாளர்களிலிருந்து ஒருவராக பிக் பாஸ் இல்லத்தில் நுழைந்துள்ளார்.

1

From Around the web