ஒருவழியாக தன் காதலை வெளிப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்..!!  

 
1

 விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்துக்கொண்டவர்கள் பாவ்னி மற்றும் அமீர். இந்த ஜோடிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இதற்கு காரணம் பாவ்னியை அமீர் காதலித்து வருவதாக கிசுகிசுத்து வந்தன. 

எப்போது அமீர், பாவ்னியிடம் காதலை சொல்லுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கடைசியில் நிகழ்ச்சிக்காக அப்படி நடந்துக் கொண்டேன் என்று அமீர் கூறினார். அதை ரசிகர்கள் கொஞ்சம் கூட நம்பவில்லை. 

1

இந்நிலையில், சமீபத்தில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கூட மோதிரம் ஒன்றை அமீருக்கு பாவ்னி அணிந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய அமீருக்கு, பாவனி வெளியிட்ட வாழ்த்து செய்தி, அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாவனி வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், “பிறர் வாழ்வில் மகிழ்ச்சியை பரப்பவும், பிறருக்கு நன்மையை மட்டுமே விரும்பவும் தெரிந்த உன்னைப் போன்ற ஒருவரைப் பெற்றிருப்பது உண்மையிலேயே பாக்கியம். நான் உன்னிடமிருந்து பெறும் அன்பும் அக்கறையும் இந்த பூமியில் உனக்கு மகிழ்ச்சியைத் தரும் அனைத்தையும் நீ பெறுவாய் என நம்புகிறேன். என் நல்லது கெட்டது என அனைத்திலும் இருந்து என்னை நேசித்ததற்கு நன்றி, நான் பல விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் வார்த்தைகள் வரவில்லை. லவ் யூ டா... பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருந்தார்.

From Around the web