விமானத்தில் இப்படியா நடந்துப்பாங்க - பிக்பாஸ் புகழ் வைஷ்ணவி பகிர்ந்த வீடியோ..!

 
1

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் வைஷ்ணவி. பிரபல ஆர்ஜே-வான இவர் பிக் பாஸுக்கு பிறகு காதலரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். அவர் புகைப்படம்  வெளியிட்ட பிறகு தான் திருமணம் முடிந்தது எல்லோருக்கும் தெரிய வந்தது.

சமீபத்தில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக  அவரே அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இருவருக்கும் செட் ஆகவில்லை என பேசி பிரிந்துவிட்டதாக வைஷ்ணவி தெரிவித்தார். 'துரதிஷ்டவசமாக சூழ்நிலை எங்களுக்கு சரியாக இல்லை. நாங்கள் நண்பர்களாக மட்டும் இருப்பது தான் சரியாக இருக்கும்' என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போது வைஷ்ணவி விமானத்தில் பாங்காக் சென்று இருக்கிறார். அப்போது நடந்த மோசமான அனுபவம் பற்றி ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார் அவர்.
விமானத்தில் பயணம் செய்தவர்கள் கூட்டமாக ரகளை செய்கிறார்கள். குடிபோதையில் என்ஜாய் செய்வதாக எல்லோருக்கும் தொல்லை கொடுக்கிறார்கள், விமான பணிப்பெண்களிடமும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்."

பாங்காக் செல்லும் விமானத்தில் தான் இப்படி நடக்கிறது என வைஷ்ணவி குறிப்பிட்டு இருக்கிறார்.


 


 

From Around the web