மீண்டும் அஜித் படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..!! கடும் கோபத்தில் ரசிகர்கள்..!! 

 
1

அஜித்தின் மாஸ் &  கிளாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. வரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வெளிநாடுகளில் லைக்கா நிறுவனம் செய்து வருகிறது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை  உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தமிழை கடந்து இந்த படம் தெலுங்கில் தெகிம்பு என்கினற பெயரில்  டப் செய்யப்பட்டு  வெளியாக உள்ளது.

1

இந்த நிலையில், டிசம்பர் 31 அன்று துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. ட்ரைலர் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது. தற்போது வரை  37 மில்லியன் பார்வைகளை துணிவு ட்ரைலர் கடந்திருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் துணிவு படத்தை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருக்கிறார். “எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!!” என குறிப்பிட்டு Inside Man என்ற ஹாலிவுட் படத்தின் ட்ரைலரை பகிர்ந்து இருக்கிறார்.இதை பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை ட்விட்டரில் கழுவி ஊத்தி கமெண்ட் அடித்து வருகின்றனர் 

From Around the web