உதவி கேட்ட போண்டாமணி… சிகிச்சைக்கான பணத்தை கொடுத்தது தமிழக அரசு!

 
1

பிரபல காமெடி நடிகராக இருப்பவர் போண்டாமணி. இலங்கை தமிழரான இவர், ரொம்பவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் வந்தார். காதீஸ்வரன் என்ற இயற்பெயரை கொண்ட இவர், இதுவரை 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். வடிவேலுவுடன் இவர் நடிக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் போண்டா மணிக்கு இரண்டு கிட்னி செயலிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் சென்னை ஓமந்தூரர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கிட்னி தானம் கொடுக்க ஆள் இல்லாததால் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. 

1

இந்த நிலையில்,மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் போண்டாமணி மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வரும் இவருக்கு உதவுமாறு காமெடி நடிகர் பெஞ்சமின் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் தயவுசெய்து இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்கள், அவரின் மேல் சிகிச்சைக்கு உதவும் படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். மேலும் போண்டா மணியும் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. டயாலிசிஸ் அல்லது மாற்று கிட்னி பொறுத்த வேண்டும் என மருத்துவர்கள் சொல்வதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் போண்டா மணியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். மேலும் போண்டா மணியின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார். 

From Around the web