பிரபல நடிகையை காதலிக்கும் பாய்ஸ் பட நடிகர்..!! 

 
1

தென்னிந்தியாவில் நடிகர், இயக்குனர் என பன்முக திறமைக் கொண்டவர் நடிகர் சித்தார்த். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு ஆயுத எழுத்து, உதயம் என் எச் 4, 180, காதலில் சொதப்புவது எப்படி, தீயாய வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

சினிமாவை தவிர சமூகத்தில் ஏற்படும் பல பிரச்சனைக்கும் குரல் எழுப்பி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், துணிச்சலான சில விஷயங்களை பேசி சர்சைகளிலும் சிக்குவதும் உண்டு. 

1

இந்நிலையில், பிரபல நடிகையான அதிதி ராவை நடிகர் சித்தார்த் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இவர்கள் நடித்த ‘மகா சமுத்திரம்’ படத்தின் மூலம் இவர்களிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பொது நிகழ்விலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோன்று இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 
 

From Around the web