நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிபி படம்..!!
Jul 19, 2022, 15:03 IST
‘மாயோன்’ வெற்றிக்கு பிறகு சிபிராஜ் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வட்டம்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கமலகண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் திரையரங்கில் வெளியாகாது என்றும், விரைவில் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் இப்படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 - cini express.jpg)