தப்பிக்கலாமா ? அனல் பறக்கும் தக்ஸ் டிரைலர் வெளியானது..!! 

 
1

தமிழ் சினிமாவின் குறுகிய காலத்தில் பிரபலமான நடிகர்களில் பாபி சிம்ஹாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. வில்லனாக மிரட்டி வந்த பாபி சிம்ஹா, தற்போது ஹீரோவாக புதிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தடை உடை, இராவண கல்யாணம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்த படங்கள் போன்று பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’. ஆக்ஷன் அதிரடியில் உருவாகி வரும் இந்த படத்தை பிருந்தா மாஸ்டர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். வில்லனாக ஆர்.கே.சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் முனிஸ் காந்த் மற்றும் பாலிவுட் நடிகர் ஹிருது ஹாரூன் ஆகியோரும் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

1

கன்னியாகுமரி மாவட்டத்தின் அடியாட்களுக்கு இடையே நடக்கும் வன்முறை சம்பவங்களை வைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு என உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரில்  ஜெயில் கதைகளத்தில் அனல் பறக்க கதை அமைந்துள்ளது. மாஸ் காட்சிகளுடம் கூடிய இந்த டிரைலரை நடிகர்களான விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா, நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிரூத் அகியோர் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.


 

From Around the web