பிரபல நடிகை இன்ஸ்டாக்ராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது ?

ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூகத்தளத்தில் தன்னுடைய படங்களையும், படம் குறித்த செய்திகளையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்க முடியாமல் தவித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னுடைய கணக்கு முடக்கப்பட்டுள்ளதா அல்லது ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்திருந்தார். இன்ஸ்டாகிராம் ட்வீட் கணக்கிற்கு டேக் செய்தும் இருந்தார்.
My instagram handle has been hacked or suspended .Pls help me resolve it as soon as possible @instagram
— aishwarya rajesh (@aishu_dil) April 4, 2022
உடனடியாக அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு சரி செய்யப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளது. வேகமாக சரி செய்த இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு ந்னறி தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்
ட்விட்டரும், இன்ஸ்டாகிராமும் குறிப்பாக இன்ஸ்டாகிராமும் நடிகைகளுக்கு ரசிகர்களுடன் தொடர்பை வைத்துக்கொள்ளும் முக்கியமான அன்றாட செயலிகளாகிவிட்டது. சற்று நேரம் முடங்கினாலும் துடித்துப் போய்விடுகிறார்கள்.