சிறையில் செல்லமா நடிகர் கொடுத்த பேட்டி..!!

 
1

பிரபல நடிகை திவ்யா ஸ்ரீதர் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து திவ்யா “தான் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கணவர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கணவர் அடித்ததில் எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாகவும்” ர்னவ் தாக்கியதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை திவ்யா புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அர்னவுக்கு போரூர் மகளிர் போலீசார் அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அர்னவ் தலைமறைவாக பூந்தமல்லியில் உள்ள படப்பிடிப்பில் இருந்த போது கையும் களவுமாக பிடித்தனர் .

1

இதையடுத்து,அர்னவ்வை மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்திய போலீசார், விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். மேலும், அவரை வரும் 28ந் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்னவ், தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும், பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன் மீது திவ்யா இப்படி ஒரு புகாரை அளித்திருப்பதாகவும், நன்றாக பழிவாங்கி விட்டாய் திவ்யா இப்ப சந்தோஷமா எனவும் அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

From Around the web