செல்லமா சீரியல் நடிகரின் ஜாமீன் மனு ரத்து..!
 

 
1

‘கேளடி கண்மணி’ தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா. தற்போது ‘செவ்வந்தி’ தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் ‘செல்லம்மா’ தொடரில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் அர்ணவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை திவ்யா, தனது கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் கூறி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனது கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோக்களையும் வெளியிட்டார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

1

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அர்ணவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து 15 நாள் காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நடிகர் அர்ணவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்த அர்ணவ் தனக்கு ஜாமின் வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்தார். பூந்தமல்லி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் இல்லாத காரணத்தால் இதன் பொறுப்பு நீதிபதியான அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதி மனுவை விசாரித்தார்.

இருதரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதி நடிகர் அர்ணவ் ஜாமினில் வந்தால் சாட்சிகளை களைக்க கூடும் என எதிர்தரப்பு வாதத்தை ஏற்று அர்ணவின் ஜாமின் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
 

From Around the web