சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'பாபா' படத்தின் கிளைமேக்ஸ் மாற்றம்..?

 
1

சூப்பர்ஸ்டார் நடித்த பாபா திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ   ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை தயாரித்தும் இருந்தார். ரஜினியை வைத்து  அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற ஹிட் படங்களை இயக்கிய  சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கினார். ரஜினிகாந்தின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இந்த படம், மிக பிரமாண்டமாக வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படம் 2002ம் ஆண்டு ரிலிஸ் ஆனபோது, படத்தின் இறுதி காட்சியில் பாபா இமயமலைக்கு செல்லாமல் அரசியலுக்குள் நுழைய இருக்கிறார் என்பதுபோல இருக்கும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள படத்தில் கிளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்திருந்த நிலையில், தாயின் மீது உள்ள பக்தியால் பாபா அரசியலுக்கு செல்வது பற்றி நினைக்கவில்லை என கிளைமேக்ஸ் மாற்றப்பட்டுள்ளது.

From Around the web