பகிரங்க மன்னிப்பு கேட்ட கோப்ரா இயக்குனர்..!

 
1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோப்ரா'. டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இப்படம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதேபோன்று படம் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்று படக்குழு எதிர்பார்த்த நிலையில் பின்னடவை சந்தித்து வருகிறது. 

சீயான் விக்ரமின் கடின உழைப்பை இயக்குனர் வீணடித்து விட்டதாக ரசிகர்கள் தாறுமாறாக விளாசினார்கள். அதே நேரம் இப்படத்தின் நீளம் 3. மணி நேரம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனையடுத்து படத்தின் நீளத்தில் 20 நிமிடங்களை படக்குழுவினர் குறைத்தனர். இந்நிலையில் படம் குறித்த ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் அஜய் ஞானமுத்து.

1

திரைக்கதை குழப்பமாக இருப்பதாக ரசிகர் ஒருவர் கமெண்ட் அடித்த போது, உங்களுக்கு திரைக்கதை குழப்பமாக இருந்ததற்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள். இன்னொரு முறை ‘கோப்ரா’ படம் பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர்தான் ‘கோப்ரா’ படத்தை இய்க்கினாரா என்பதை நம்ப முடியவில்லை என்ற ரசிகரின் கருத்துக்கு, ‘நீங்கள் ஏமாற்றமடைந்ததற்கு மன்னித்து கொள்ளுங்கள். அடுத்த முறை உங்களை கட்டாயம் திருப்திப்படுத்துவேன்.

தற்போது ரசிகர்களுக்கு இவர் அளித்துள்ள பதில் சமூகத்தளங்களில் செம வைரலாக வலம் வருகிறது .

1

From Around the web