காமெடி மன்னன் கவுண்டமணி இஸ் பேக்..!! 

 
1

1960களிலேயே கவுண்டமணி சினிமாவுக்கு நடிக்கவந்துவிட்டாலும் அவர் உச்சம் தொட்டது என்னவோ 1980களில்தான். தொடக்கத்தில் சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது அவர் பெயரைக் கூட திரையில் போடமாட்டார்கள். ஆனால் பின்னொரு காலத்திலோ அவர் பெயரைப் போட்டாலே அந்தப் படம் ஓடிவிடும் என தயாரிப்பாளர்கள் நினைக்கும் நிலையை தனது அசாத்தியமான உழைப்பால் உருவாக்கிக் காட்டியவர் கவுண்டமணி.

சூப்பர் ஹிட் காமெடி காம்போ என்ற பட்டியலை எடுத்து பார்த்தால், கவுண்டமணி, செந்தில் தவிர்க்க முடியாதவர்கள்.90-களில் படத்தில் யார் ஹீரோ என்பதை கடந்து ‘படத்துல கவுண்டமணி, செந்தில் இருக்காங்களாப்பா?…’ என கேட்டே படங்களுக்கு சென்றனர் மக்கள். அந்த அளவிற்கு இவர்களுக்கான ரசிகர்கள் கூட்டம் பரந்து விரிந்து இருந்தது.

1

அதிகாரவர்க்கத்தைத் தோலுரிப்பதாக இருந்தாலும் சரி; மோசமான அரசியல்வாதிகளை துவைத்துக் கட்டுவதாக இருந்தாலும் சரி, நகைச்சுவையில் கவுண்டமணியின் பாணியே தனிதான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் சாதியவாதத்துக்கு எதிராகவும் தனது கருத்துகளைப் படங்களில் விதைக்கவும் அவர் தவறியதில்லை.

இந்நிலையில்,  நடிகர் கவுண்டமணி  தனது 83 வயதில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தை பேயை காணோம் படத்தின் இயக்குநரான செல்வா அன்பரசன் இயக்கவிருப்பதாகவும்; அந்த படத்தில் கவுண்டமணி கழுதை மேய்ப்பவராக நடிக்க போவதாகவும்; படம் அரசியல் நய்யாண்டி படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
 

From Around the web