காமெடி மன்னன் கவுண்டமணி இஸ் பேக்..!!
 

 
1

தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. 80, 90-களில் ஹீரோவுக்கு நிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள கவுண்டமணி, தற்போது உள்ள பல காமெடி நடிகர்களுக்கு முன்னூதாரமாக இருப்பவர். இவர் நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் இன்றைக்கும் ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர், கடைசியாக ‘வாய்மை’ படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து தனது 83 வயதில் மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார். 

PazhaniSamiVaathiyar

‘பழனிசாமி வாத்தியார்’ தலைப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் செல்வ அன்பரசன் என்பவர் இயக்கவுள்ளார். முழுக்க முழுக்க காமெடியில் உருவாகும் இந்த படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து யோகிபாபு மற்றும் கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் ராதாரவி, சித்ரா லட்சுமணன், மனோபாலா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் கே இசையமைக்கும் இந்த படத்தை வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற உடற்பயிற்சி ஆசிரியராக கவுண்டமணி நடிக்கவுள்ளார். 

From Around the web