விரைவில் வருகிறேன்..!! ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆல்யா மானசா ! 

 
1

சின்னத்திரை ஹீரோயின்களில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான இவர், கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான பிரபல நிகழ்ச்சியான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். 

அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் கதாநாயகியாக தோன்றினார். இதே சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு அய்லா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆல்யா கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பேசிய அவர், இரண்டாவது முறையாக குழந்தை பிறந்துள்ளதால் உடல் எடை கூடியுள்ளேன். தற்போது சீரியலில் நடிக்க வேண்டுமென்றால் உடல் எடையை குறைக்க வேண்டும். சரியாக சாப்பிட முடியாது. அதனால் சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளேன் என்று கூறினார்.

From Around the web