சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத இருக்கும் தளபதி விஜய் .?
May 11, 2022, 17:17 IST

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும், ரஜினியின் பேட்ட திரைப்படமும் கடந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெரிய லாபத்தை கொடுத்தது.
இந்நிலையில், இதைபோல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் மிகப்பெரிய இரண்டு படங்கள் மோதவுள்ளதாக கூறப்படுகிறது . அதன்படி, விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதனை தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள தலைவர் 169-திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இரண்டு படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.