புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த தளபதி விஜய்!! அப்படி என்ன நடந்தது..?
Nov 22, 2022, 18:50 IST
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், விஜய் தனது ரசிகர்களையும் மாவட்ட நிர்வாகிகளையும் நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் சந்தித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில், மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்றார். அப்போது, மாவட்ட நிர்வாகிகள் பலர் புஸ்ஸி ஆனந்தின் காலில் விழுந்து வணங்கி சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீட்டிற்குச் சென்ற தளபதி விஜய், புஸ்ஸி ஆனந்தை அழைத்து மிகவும் கடிந்து கொண்டாராம்.. இதுபோல் இனி நடக்கக் கூடாது என்று கூறினாராம் விஜய்.இனி காலில் விழக்கூடாது என மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் தரப்பில் இருந்து செய்தி பறந்துள்ளது.