புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் அர்ணவுக்கு நிபந்தனை ஜாமீன்..!! 

 
1

சின்னத் திரை நடிகை திவ்யா.   இவரது கணவர் சின்னத்திரை நடிகர் அர்ணவ்.   கர்ப்பிணியான தன்னை அர்ணவ் அடித்து துன்புறுத்தியதாகவும் இந்த சம்பவ செயலால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் சொல்லி  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் திவ்யா.

r

 போரூர் அனைத்து மகளிர் போலீசிலும் புகார் அளித்திருந்தார்.  பெண் வன்கொடுமை, கொலைமிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.   கடந்த 14ஆம் தேதி பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பிலிருந்துஅர்ணவை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அவருக்கு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  சிறையில் இருந்தபடியே  தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார் அர்ணவ்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது,  இந்த மனுவை குடும்ப வழக்காக பார்க்க வேண்டும் குற்ற வழக்காக பார்க்க கூடாது என்று வைத்து அர்ணவ் வழக்கறிஞர் வாதாடினார்.   இதன் பின்னர் நடிகர் அர்ணவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி.

From Around the web