குவியும் வாழ்த்து!பிரபல நடிகை அஞ்சலி நாயருக்கு பெண் குழந்தை!!

 
1

மலையாள திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகையாக இருப்பவர் அஞ்சலி நாயர். இவர் 1994-ம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளியான ‘மானதே வெள்ளித்தெரு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தென்னிந்திய மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஞ்சலி ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் மூலம் பிரபலமானார். 

Anjali-nair

இவர் '5 சுந்தரிகள்', 'ஏபிசிடி', 'லைலா ஓ லைலா', 'கம்மட்டிபாடம்', 'கனல்', 'ஒப்பம்', 'புலிமுருகன்', 'டேக் ஆஃப்', 'த்ரிஷ்யம் 2', 'காவல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நெல்லு படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், இதையடுத்து கோட்டி, உன்னையே காதலிப்பேன் போன்ற படங்களில் நடித்தார். சிவா - ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி நாயர், கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்ற இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இத்தம்பதி அண்மையில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து, நடிகை அஞ்சலி நாயர், அஜித் ராஜு என்பவரை காதலித்து ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலி நாயருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அஜித் ராஜு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படத்தை பதிவிட்டு, “எங்கள் புதிய குடும்ப உறுப்பினர், இனிமையான பெண் குழந்தையைப் போலவே வாழ்க்கையும் அற்புதங்கள் நிறைந்தது. உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்குத் தேவை,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web