வாழ்த்துக்கள் கோபி... நீங்க தாத்தா ஆயிட்டிங்க..!!

 
1

விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக உச்சக்கட்ட பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்த சீரியல் ‘பாக்யலட்சுமி’. தனது அப்பாவி மனைவியை கைவிட்டு தனது தோழியான ராதிகாவை கோபி திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு கோபி வாழ்க்கையில் என்ன மாதிரியான திருப்பங்கள் ஏற்படுகிறது என்பது தற்போதைய கதைக்களம். 

அதன்படி தனது வீட்டில் மிகவும் சொகுசாக வாழ்ந்த வந்த கோபி, ராதிகாவிடம் படாதபாடு பட்டு வருகிறார். ஒரு காபிக்கு கூட ராதிகாவிடம் கொஞ்சி வருகிறார்.

இதற்கிடையே பாக்யாவின் மூத்த மகனான செழியனின் மனைவி ஜெனி கர்ப்பமாகிறார். இதனால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இந்நிலையில் கோபியை வெறுப்பேற்றும் விதமாக கோபியின் அப்பாவின் கோபி மற்றும் ராதிகாவிற்கு இனிப்பு வழங்குகிறார். அதோடு கோபி தாத்தாவாகிவிட்டதாக கூறுவதால் ராதிகா கடுப்பாகும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

From Around the web