இயக்குனர் அட்லிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
பிரபல இயக்குனராக இருக்கும் அட்லி, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதையடுத்து ஆர்யா - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அடுத்து விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார்.
தமிழ் சினிமாவில் கலக்கி வந்த அட்லி, தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே கடந்த 2014-ஆம் ஆண்டு பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் இயக்குனர் அட்லி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்து ஒன்றை அட்லி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மனைவி பிரியா அட்லி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். 8 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடிக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகின்றனர். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் அட்லி - பிரியா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.