நம்ம விஜய் டிவி ராமருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!! 

 
1

விஜய் டிவி ராமர் என்றால் ரசிகர்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ‘சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை’ காமெடி எபிசோடு தான். ராமரும் நாஞ்சில் விஜயனும் சேர்ந்து செய்த இந்த காமெடி ஆக்டிங் இணையத்தை புரட்டி போட்டது. இந்த வீடியோ யூடியூப்பில்  மில்லியன் கணக்கில் லைக்ஸ்களை குவித்தது. ஒரே நாளில் ராமர் மக்கள் போற்றும் கலைஞராக கொண்டாடப்பட்டார். அதன் பின்பு அவருக்கென தனி ஷோவையே விஜய் டிவி ஒதுக்கியது.

ராமரின் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, ஆத்தாடி என்ன உடம்பு போன்ற வசனங்கள் இன்றளவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆப் காமெடி போன்ற பல காமெடி நிகழ்ச்சிகளில் இவர் கலக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பெண் அது அணிந்து வந்தால் தான் ரசிகர்கள் இவரை பெரிதும் விரும்புவர்.

1

தற்போது ராமர் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு எல்லா நிகழ்ச்சியிலும் ராமர் பங்கேற்று வருகிறார். சின்னத்திரையின் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு சின்னத்திரையின் தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ராமர் சொந்தமாக ஒரு புது வீட்டை கட்டி இருக்கிறார். இன்று அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நடைபெற்ற நிலையில் அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.நடிகர் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு எடுத்து புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

1

From Around the web