நயன்தாரா பிறந்தநாளையொட்டி வெளியான கனெக்ட் டீஸர்..!! 

 
1

பிரபல நடிகையான நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 'மாயா'. இந்த படத்தன் வெற்றிக்கு பிறகு அதே பாணியில் உருவாகும் ‘கனெக்ட்’ படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தை ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்

நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்து வருகிறார். 

1

இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. நயன்தாரா பிறந்தநாளையொட்டி வெளியான இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

From Around the web