சர்ச்சையில் சிக்கியுள்ள நயன்-விக்கி ஜோடி..!! 

 
1

தென்னிந்தியாவில் நெம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 6 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதையடுத்து சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். 

1

திரைத்துறை பிரபலங்களின் பிரமாண்டமாக திருமணங்கள் ஓடிடி-யில் வெளியாவது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாலிவுட்டில் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணத்தை பதிவு செய்து பிரபல ஓடிடி-யில் வெளியிட்டு பெரும் தொகை பெற்றனர்.அதேபோல் தமிழில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இந்த வழியை கையில் எடுத்தனர்.இந்த பிரம்மாண்ட திருமணத்தை வீடியோவாக எடுத்து நெட்பிளிக்ஸில் தளத்தில் வெளியிடுவது திட்டம். அதற்காக 25 கோடி கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு திருமணத்திற்கான ஏற்பாடுகள், மணமேடை, மணம் நடந்த இடத்திற்கான அலங்காரம், பிரபலங்களுக்காக செய்யப்பட்ட தங்கும் வசதி, திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவுக்காக செலவு உள்ளிட்டவைகளை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனமே செய்ததாக கூறப்படுகிறது. 

1

எனவே திருமணத்தில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாகாத வண்ணம் உச்ச கட்ட பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில தினங்களுக்கு முன்பு ஷாருக் கான், ரஜினிகாந்த், ஏஆர் ரஹ்மான், சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் ஆர்வம் குறைந்துவிட்டதாகக் கருதி அவர்களின் திருமண வீடியோவை ஒளிபரப்புவதிலிருந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.   

1

இந்நிலையில் நெட் ஃபிளிக்ஸ் ஒப்பந்தத்தை மீறி திருமண புகைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர். இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டியுள்ள நெட் ஃபிளிக்ஸ்,  இழப்பீடாக 25 கோடி திருப்பி வழங்கக்கோரி நயன் மற்றும் விக்கி ஜோடிக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. 


 

From Around the web