சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி... அவங்க சொல்லிதான் அப்படி பேசினேன் - நடிகர் சதீஷ் விளக்கம்..!! 

 
1

2009-ல் வெளியான ‘சிந்தனை செய்’ படத்தின் மூலம் இயக்குநரான அறிமுகமானவர் ஆர்.யுவன். தற்போது உருவாகி உள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடிகை சன்னி லியோன் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே.சசி குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சன்னிலியோன் உட்பட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டு பேசினர்.

Sathish

இது குறித்து மேடையில் பேசிய நடிகர் சதீஷ், வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நடிகை சன்னிலியோன் நமது கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்திருக்கிறார். ஆனால் நடிகை தர்ஷா குப்தா கோயம்புத்தூரை சேர்ந்தவராக இருந்தாலும் எப்படி உடை அணிந்து வந்துள்ளார்'' என்று பேசினார். இதைத்தொடர்ந்து சதீஷின் பேச்சுக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த பதிவுகளின் எப்படி உடை அணிய வேண்டும் என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை தர்ஷா குப்தா சொல்லிதான் அப்படி பேசினேன் என்று ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகர் சதீஷ் விளக்கமளித்துள்ளார். இது குறித்து நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஓ மை கோஸ்ட் படத்தில் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்தது. அதில் என்னுடன் நடித்த தர்ஷா குப்தா எனது பக்கத்தில் அமர்ந்து நான் இன்னைக்கு சன்னி லியோன் விட மார்டனா ட்ரெஸ் பன்னிட்டு வந்துர்கேன்.. அவங்க எப்படி வராங்கனு பாப்போம்னு சொன்னாங்க. பாத்தா சன்னி லியோன் பட்டு புடவை கட்டிட்டு வந்துர்ந்தாங்க அத பாத்தா தர்ஷா அப்செட் ஆகிட்டு சொன்னாங்க.. என்னங்க நான் இப்படி வந்துர்கன் அவங்க அப்படி வந்துட்டாங்க நான் அத பாத்து அப்செட் ஆகிட்டனு நீங்க ஸ்டேஜ்ல பேசும்போது சொல்லுங்க என்று தர்ஷா கூறியதாக சதீஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சதீஷ், ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் சாதரனமா பேசி அத அவங்க சொல்லிதான் ஸ்டேஜ்லையும் பேசினேன் அது இப்போ இப்படி பேசுறாங்க... ஆடை என்பது அவர்கள் உரிமை என்று ஆமா நானும் அத ஏத்துக்குறேன். மேலும், திரைப் பிரபலங்கள் மூடர் கூடம் நவீன், சிங்கர் ஸ்ரீனிவாஸ், சின்மயி, டாக்டர் ஷர்மிளா எல்லாம் இத பத்தி பேசியிருந்தாங்க... அவங்களுக்கும் சொல்லிக்கிறேன் இது இப்படி நடந்ததுதான் என்று தெரிவித்துள்ளார்.

From Around the web