துபாய் ரோட்டில் மகளுடன் டான்ஸ் ஆடிய குக் வித் கோமாளி நடுவர்..!! 

 
1

பல சேனல்கலும், பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன. அதிலும் குறிப்பாக 'குக் வித் கோமாளி' (Cook With Comali) என்கிற சமையல் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ரக்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக கலக்கி வருகின்றனர்.

வெங்கடேஷ் பட், கோமாளிகளுடன் சர்வசாதாரணமாகப் பழகி, அவர்களுடன் லூட்டி அடிப்பதை பார்ப்பதற்கு இனிமையாக இருக்கும். இந்த சீசனின் கோமாளிகளில் ஒருவரான பரத், வெங்கடேஷ் பட் அவர்களுக்கு பட்டுக்குட்டி என செல்லப்பெயர் வைக்க தற்போது அவருடைய மகளே வெங்கடேஷ் பட் அவர்களை பட்டுக்குட்டி என்று கூப்பிடுவதாக நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் துபாய் சென்ற வெங்கடேஷ் பட் தனது மகளுடன் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடத்தின் முன் நடனமாடியுள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது..

From Around the web