பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று..!! 

 
1

திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஷாருக்கான்.இதன் டீசர் கடந்த 2-ம் தேதி வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை யூட்யூபில் பெற்றுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படமானது அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.

அதேபோல், ஷாருக், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகிய நடிப்பில் உருவாகும் பதான் படமும் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கும், டாப்ஸியும் நடிக்கும் படமான பன்கி படமும் அடுத்த வருடம் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாள்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனது 50-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்டூடியோ ஒன்றில் பிரம்மாண்ட பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த மே 25-ம் தேதி நடந்த இந்த பார்ட்டியில், ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான், சைஃப் அலிகான், கரீனா கபூர் உட்பட சினிமா மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த சுமார் 120 பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Karan-johar

இவர்களில் 55 நடிகர், நடிகைகளுக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் யாரும் வெளியே சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. நடிகர் கார்த்திக் ஆர்யன் இந்த விழாவுக்குச் செல்லவில்லை என்றாலும் இதில் கலந்துகொண்ட நடிகை ஒருவர் மூலம் அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

From Around the web