‘லிகர்’ படத்தின் வெறித்தனமான ட்ரைலர் வெளியானது..!!

பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள விஜய் தேவரகொண்டா, தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி வெளியாகவுள்ள திரைப்படம் ‘லிகர்’. சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ் என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் உலக புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசனும் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக சற்று முன் வெளியானது.ரம்யா கிருஷ்ணன் விஜய்யின் அம்மாவாக நடிக்கிறார், மேலும் அவர் தைரியமான மற்றும் சுதந்திரமான பெண்ணாக சித்தரிப்பதைப் பார்க்கும்போது அவருக்கு ஒரு சரியான கதா பாத்திரம் கிடைத்துள்ளது.
விஜய் தேவரகொண்டா கடைசியாக 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவர் படத்தில் நடித்தார், மேலும் 2.5 வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் லிகர் மூலம் மீண்டும் பெரிய திரைகளில் ரிலீசாக உள்ளது .