ஓடிடியில் வெளியாகிறதா மன்மத லீலை.?

 
1

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த படம் ‘மன்மத லீலை’.  இந்த படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்துள்ளார். அவருக்கு‌ ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணன் என்பவர் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார்.

இப்போது படம் விரைவில் OTT தளத்தில் திரையிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெளியீட்டு தேதியை வெளியிடாமல், படம் விரைவில் டிஜிட்டல் தளத்தில் திரையிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், அசோக் செல்வன் தனது அடுத்த படமான ‘ஹாஸ்டல்’ படத்தை ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட காத்திருக்கிறார்.



 

From Around the web